கும்பகோணம் டிச.8- வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந் துள்ளது. நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. இந் நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பானாத்துறை பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி, அதிக விலைக்கு வெங்கா யத்தை வாங்கி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கொடுத்துள்ளார். இவர் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக அப்பகு தியில் உள்ள ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறார். தற்போது கிடுகிடுவென உயர்ந்த வெங்காய விலையால் ஏழை, நடுத்தர மக்கள் அதைப் பயன்படுத்த முடியாத நிலை யில் இருப்பதை எண்ணித் தாமே வெங்காயத்தை மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய முடிவு செய்தார். அதன்படி வெங்காயத்தை மூட்டையாக வாங்கி தனது வீட்டுக்கு முன்பு தள்ளுவண்டியில் கொட்டி வைத்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்தார். இந்தத் தகவல் அறிந்த அப்பகுதி பெண்கள், தங்களுக்குத் தேவையான வெங்கா யத்தை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.