tamilnadu

img

குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி கடையடைப்பு பேரணியில் 4 ஆயிரம் பேர் பங்கேற்பு

தஞ்சாவூர், டிச.19–  தஞ்சை அதிராம்பட்டினத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலி யுறுத்தி, 4 ஆயிரம் பேர் பேரணி நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், இஸ்லாமிய அமைப்புகள், கிராமத்தினர், உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாயத்தினர் பங்கேற்ற பேரணி, தக்வா பள்ளிவாசல் அருகே துவங்கி, ஜாவியா, கிழக்கு கடற்கரை  சாலை வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. இதில், எம்.எஸ்.அப்துல் ஹாதி முப்தி, தேங்கை சரபுதீன், திமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, என். காளிதாஸ், மவ்லவி சபியுல்லாஹ் அன்வாரி, இராம.குணசேகரன், ஏ.ஜெ ஜியாவுதீன், எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், ஏ.அபுபக்கர் சித்திக், கோவை செய்யது ஆகியோர் உரை நிகழ்த்தி னர். அப்போது, “தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.  போராட்டத்திற்கு, அதிராம்பட்டினம் வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்து, அதிராம் பட்டினம் பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள் அடைக்கப் பட்டன. மேலும், அதிராம்பட்டினம் கார், வேன், ஆட்டோ வாகனங்கள் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

;