தஞ்சாவூர், ஜூன் 13- தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கலை கண்காணிக்க, தஞ்சை மாநகராட்சி சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு குழு விலும் 6 துப்புரவு ஆய்வாளர்கள், 15 பணியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை வடக்கு அலங்கம் பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் பூட்டியிருந்த குடோனை உடைத்து உள்ளே சென்று பார்த்து போது, அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள், மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு இருப்பதும், 20 டன் எடை அளவிலான பொருட்கள் என தெரிய வந்தன. இதைத் தொடர்ந்து அதிகாரி கள் அந்த பொருட்களை பறிமுதல் செய்து, லாரி மூலம் ஏற்றி, மறுசுழற்சி செய்ய உரக்கிடங்கிற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.