கவாஸ்கர் சாதனை சமன்
கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து நாட்டில் நடப்பாண்டிற்கான ஆஷஸ் தொடர் நடைபெற்றது. வழக்கம் போல பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினாலும், இங்கிலாந்து வீரர் ஆர்ச்சரின் அசத்தலான ஆட்டத்தால் திடீரென உத்வேகம் பெற்ற இங்கிலாந்து அணி, கடைசி டெஸ்டை கைப்பற்றி Sதொடரை 2-2 என்ற கணக்கில் சமனில் முடித்து வைத்தது.
இந்த தொடரில் ரன் மழை பொழிந்த ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் பல்வேறு சாதனை படைத்தார். ஆஷஸ் தொடரின் கடைசி நாளையும் விட்டுவைக்காத ஸ்மித் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவாஸ்கர் சாதனையைச் சமன் செய்துள்ளார். கவாஸ்கர் தனது அறிமுக டெஸ்ட் தொடரின் (மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக) முதல் 4 டெஸ்டுகளில் 774 ரன்கள் குவித்தார். அதே போல ஸ்மித் நடப்பு ஆஷஸ் தொடரின் 4 போட்டிகளில் 774 ரன்கள் குவித்து கவாஸ்கரின் சாதனையைச் சமன் செய்து அசத்தியுள்ளார். ஸ்மித் இன்னும் 56 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் விவ் ரிச்சர்ட்ஸ் (மேற்கு இந்தியத் தீவுகள் - 829 ரன்கள்) சாதனையை முறியடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.