tamilnadu

img

நியூஸிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்...  இஷாந்த் சர்மா விலகல்?

ஆக்லாந்து 
        நியூஸிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரான கிறிஸ்ட்சர்ச் நகரில் சனியன்று அதிகாலை 4 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது. 

ரஞ்சி போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் மீண்டும் சிரமத்தை உண்டாக்குவதால் முதல் டெஸ்ட் போட்டியில் அசத்திய இந்தியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம் எனச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

2-வது டெஸ்டில் வென்று 1-1 என்ற கணக்கில் தொடரைச் சமனில் நிறைவு செய்யும் முனைப்பில் இந்திய அணி தீவிர பயிற்சியுடன் தயாராகியுள்ள நிலையில், இஷாந்த் சர்மா காயம் புதிய குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இஷாந்த் சர்மாவின் காயம் குறித்து பிசிசிஐயிடமிருந்து இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.  

;