tamilnadu

img

ஹாங்காங் ஓபன் 2019 : 2-வது சுற்றுக்கு முன்னேறிய பிவி சிந்து

ஹாங்காங் ஓபன் 2019 பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரியா வீராங்கனையை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரியாவைச் சேர்ந்த கிம் கா யூன்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை 21-15 எனவும், 2-வது செட்டை 21-16 எனவும் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் செட்டை 18 நிமிடங்களில் கைப்பற்றினார். மற்றொரு வீராங்கனையான சாய்னா நேவால் சீனாவைச் சேர்ந்த காய் யான் யானிடம் 13-21, 20-22 என தோல்வியை சந்தித்தார்.