டோக்கியோ ஒலிம்பிக்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தான் நாட்டின் நூர் சுல்தான் நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ‘ப்ரீஸ்டைல்’ 53 கிலோ பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் முதல் சுற்றில் ஜப்பானின் மாயூ முகாய்டாவிடம் 7-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்தார். அதிர்ஷ்ட வாய்ப்புடன் ரெபிசேஜ் முறையை பெற்ற வினேஷ் பதக்க கனவை தக்கவைத்தார். ரெபிசேஜ் சுற்றின் முதல் போட்டியில் உக்ரைனின் யூலியாவை 5-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்த வினேஷ், 2-வது போட்டியில் அமெரிக்காவின் சாராவை 8-2 வீழ்த்தி வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்குத் தகுதி பெற்றார். சாராவை வீழ்த்தியதன் மூலம் 2020-ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடரின் இந்திய மல்யுத்த அணியில் இடம்பிடித்துள்ளார்.