tamilnadu

img

கொரோனா அச்சம்... பணமில்லாததால் குகைக்குள் தங்கிய வெளிநாட்டவர்கள்

டேராடூன்:
கடந்த டிசம்பர 7-ஆம் தேதி இந்தியாவுக்கு வந்த உக்ரைன், துருக்கி, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் பணப் பற்றாக்குறை காரணமாக ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு அஞ்சி இவர்கள் குகைக்குள் தங்கி இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

டேராடூனில் உள்ள முனி கி ரெட்டி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில்  தங்கியிருந்தனர். கொரோனா பரவி வந்த நிலையில் கையில் பணமில்லாமல்  தவித்த அவர்கள் அங்குள்ள புகழ் பெற்ற நீல்காந்த் கோவிலுக்குச் செல்லும் வழியில் டோபட்டா என்ற இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ரிஷிகேஷ் கங்கையாற்றின் குறுக்கே உள்ள ஒரு குகையில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  விரைந்து சென்ற காவல்துறையினர்  அவர்களை மீட்டு சாவர்காஷ்ரம் அறக்கட்டளை நடத்தும் விடுதியில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

 தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உக்ரைனைச் சேர்ந்த ஓலே சாண்டெட்ஸ்கி. ஒக்ஸானா கிராவ்சுக், துருக்கியைச் சேர்ந்த மார்வ் துர்ஹான், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ரஃபேல் பால்கோன், பிரான்சைச் லேடிஸ்லாஸ் லூகாஸ், நேபாளத்தைச் சேர்ந்த விஷ்ணு கிரி ஆகியோர் என ரிஷிகேஷ் லட்சுமன் ஜூலா காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.எஸ். கதீட் கூறினார்.

;