tamilnadu

img

அதிகமான படிப்பும் பணமும்தான் போராட்டங்களுக்கு காரணமாம்... ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உளறல்

அகமதாபாத்:
நாட்டில் வன்முறை மற்றும் அதிருப்தி உணர்வு அதிகரிப்பதற்கு, அதிகமான படிப்பறிவும் பணமும்தான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ‘கண்டு’பிடித்துள்ளார்.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. மோகன்பகவத்தும் தன் குடும்பத்துடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியிருப்பதாவது:

“இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துகள் அதிகரித்துவிட்டன. அற்பமான விஷயங்களுக்கெல்லாம் மக்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். மெத்தப் படித்த மற்றும் வசதிபடைத்த குடும்பத்தில்தான் அதிகப்படியான விவாகரத்துகள் நடக்கின்றன.கல்வி மற்றும் செல்வத்தின் காரணமாக மக்களுக்கு ஆணவம் வந்துவிடுகிறது. அதன் முடிவு குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. இங்கும் யாரும் மகிழ்ச்சியாக இல்லை.அனைவரும் போராடிக்கொண்டிருக் கின்றனர். மில் முதலாளிகளும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்களும் மாணவர்களும் போராடி வருகின்றனர். யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அதிருப்தியுடனே வாழ்கின்றனர். இரண்டு உலகப்போர்கள் முடிந்து விட்ட நிலையில் மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. மூன்றாம் உலகப்போருக்கான யுத்தம், வன்முறை மற்றும் அதிருப்தி வடிவில் உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.இந்தியாவுக்கு இந்து சமுதாயத்தை விட வேறு சிறந்த மாற்று கிடையாது. இந்து மக்களுக்கு, குடும்ப உறவுகளை பேணிக் காப்பதைத் தவிர வேறு வழி இல்லை.இவ்வாறு மோகன் பகவத் பேசியுள்ளார்.