புதுதில்லி:
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த தோல்விக்கு, தமதுகட்சித் தலைவர்களின் வெறுப்புப்பேச்சுதான் காரணம் என்று பாஜகமுன்னாள் தலைவரும், உள்துறைஅமைச்சருமான அமித் ஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.தில்லியில், வியாழனன்று ‘டைம்ஸ் நவ்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவரிடம், தில்லி சட்டமன்றத் தேர்தலில்பாஜக தோல்வி அடைAந்ததற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “வாக்காளர்கள் ஏன் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்கான சரியான காரணம்தெரியவில்லை. ஆனால், தேர்த லில் தோல்வி அடைந்ததற்கு பாஜக-வினரின் சர்ச்சைப் பேச்சுகள் முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம்” என்று கூறி யுள்ளார்.“தில்லி பிரச்சாரக் கூட்டங்களில் பாஜக-வினர் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியிருக்கக் கூடாது. இதனால் மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டிய நிலைஏற்பட்டு விட்டது” என்றும் தெரிவித்துள் ளார். “தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ‘ஷாகீன் பாக்’(சிஏஏ-வுக்கு எதிராக இஸ்லா மியர்கள் போராட்டம் நடத்தும் பகுதி) துடைத்து எறியப்படும்” என்று அமித்ஷாவும் தில்லி தேர்தலில் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.