tamilnadu

அடுத்தடுத்துள்ள மூன்று மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்க

இளம்பிள்ளை, நவ.1- இளம்பிள்ளையில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டுள்ள மூன்று அரசு டாஸ்மார்க் கடைகளை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும் என திராவிட விடுதலை கழ கம் சேலம் மண்டல டாஸ்மாக் மேலாளருக்கு மனு அனுப்பி யுள்ளது. இதுகுறித்து திராவிட விடுதலை கழக இளம்பிள்ளை செயலாளர் தங்கதுரை சேலம் மண்டல டாஸ்மாக் மேலா ளருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளம்பிள்ளையிலிருந்து சின்னப்பம்பட்டி, தாரமங்கலம், சங்ககிரி, மேட்டூர், நங்கவள்ளி  உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல  மாவட்ட நெடுஞ்சாலைக்கு சொந்தமான பிரதான சாலையில் அடுத்தடுத்த அரை கிலோ மீட்டர் தூரத்தில் 3 அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதனால், அப்பகுதி பெண் கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். மேலும், அடிக்கடி வாகன விபத்துகளும், குடித்து விட்டு சாலையில் மதுப்பிரியர்கள் தக ராறில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகின்றன. எனவே, அந்த மூன்று கடைகளையும் உடனடியாக இட மாற்றம் செய்ய வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.