tamilnadu

img

சேலம் : சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சேலம்,அக்.7- சேலம் மாவட்டத்திற்கான 2021ஆம் ஆண்டிற்கான சுருக்கமுறை திருத்தம் தொடர்பான வரைவு வாக்காளர் பட்டி யலை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வெளி யிட்டார். 2021ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான வரைவு வாக் காளர் பட்டியல் வெளியீடு, அனைத்து அரசி யல் கட்சிகள் முன்னிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங் கில் நடைபெற்றது. இதில், அதிமுக, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல் வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் பேசியதா வது,சேலம் மாவட்டத்தில் சுருக்கமுறை திருத்த வெளியியீட்டின்படி 29 லட்சத்து 68 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர்.

அதில் 3276 வாக்குச் சாவடிகள் மூலம் 14 லட்சத்து 83 ஆயிரத்து 369 பேர் ஆண் களும், 14 லட்சத்து 85 ஆயிரத்து 133 பெண் களும், இதர பிரிவினர் 171 என மொத்தம் 29 லட்சத்து 68 ஆயிரத்து 673 பேர் வாக்காள ராக இடம்பெற்றுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் வருகின்ற அக்.15 ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். எனவே, அந்தந்த வாக்குச்சாவடிகளில் நேரடியாகச் சென்று வாக்காளர்கள் தங்கள் பெயர் விபரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், இதுகுறித்து சந்தேகம் ஏற்பட் டால் எழுத்துப்பூர்வமாக அரசியல் கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்தால் தேர்தல் அனைத்து வழிகாட்டுதல்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சி யர் தெரிவித்துள்ளார்.