tamilnadu

img

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு இல்லை: முதலமைச்சர்...

சேலம்:
ஆன்லைனிலேயே டெண்டர், ஆன் லைனிலேயே பணம் செலுத்தும் நடைமுறையில் எப்படி ஊழல் நடக்கும்? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

சேலத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணி, கொரோனா தடுப்பு பணி பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி கூறியதாவது:-சேலத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். மாவட்டத்தில் 39,317 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் ரூ.965 கோடியில் ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் நடைபெறுகின்றன.என் உறவினருக்கு டெண்டர் கொடுத்து விட்டதாக பேசிக்கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆன்லைன் டெண்டரில் யார் வேண்டுமானாலும் ஒப்பந்தப் புள்ளி கோரலாம். ஆன்லைனிலேயே டெண்டர், ஆன் லைனிலேயே பணம் செலுத்தும் நடைமுறையில் எப்படி ஊழல் நடக்கும்?. அதிமுக ஆட்சியில் டெண்டர் விட்டதில் ஊழல் நடைபெறவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

;