tamilnadu

img

ஜனவரி 8 அகில இந்திய வேலைநிறுத்தம் சேலத்தில் 6 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடாது அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு

சேலம், டிச. 23 - ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தில் சேலம் மாவட்டத்தில் இயங்கும் 6 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடாது என அனைத்து ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் நடை பெற்ற கூட்டுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து மத்திய  தொழிற்சங்கங்கள் ஜனவரி 8-ம் தேதி  அகில இந்திய பொது வேலை நிறுத்தத் திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. இத னையொட்டி நாடு முழுவதும் போராட் டத்திற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட் டத்தில் உள்ள அனைத்து ஆட்டோக்க ளும் ஓடாது என அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  சிஐடியு ஆட்டோ சங்கதலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற அனைத்து ஆட்டோ தொழிற் சங்க கூட்டுக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மேலும் 8ஆம் தேதி நடை பெறும் பொது வேலை நிறுத்தத்தில்  அனைத்து ஆட்டோ தொழிலாளர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு  செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் சிஐடியு செயலாளர் எம்.நாகராஜ், எல்பிஎஃப் தலை வர் மணிவண்ணன், நிர்வாகி ரவிச்சந் திரன், பிடிஎஸ் நிர்வாகிகள் மாரியப்பன், ஆர்.சுந்தர்ராஜன், அண்ணா தொழிற்சங்க  தலைவர் டி.அர்த்தனாரி, எஸ்.மணி, தேமு திக தொழிற்சங்க தலைவர் டி.வடிவேல்,  எம்.ரவி, டிஎம்கே நிர்வாகிகள் அப்துல்  சமத், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நிர்வாகிகள் எம்.சபி, கே.ஜாபர் ஷெரீப், யுஎப்டியூ மாநில துணைத் தலைவர் ஞான குமார், செயலாளர் செந்தில்குமார் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;