tamilnadu

img

கிராமப்புற மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றுக தமிழக அரசிற்கு விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

சேலம், பிப்.13- கிராமப்புற மக்களின் வாழ் வாதார கோரிக்கைகளை நிறை வேற்றும் விதமாக மாநில பட்ஜெட் இருக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் சேலம் மாவட்டம் சங்ககிரியில் மாநில தலைவர் ஏ.லாசர் தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜட்டில் கிராமப்புற மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக இருக்க  வேண்டும். சமீபத்தில் முன்மொழி யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற மக்களை பாதிக்கும் வகையிலான ஏராளமான அறி விப்புகள் வெளியிடப்பட்டு உள் ளது. குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய ளிப்புத் திட்டத்தில் கடந்த ஆண்டு செலவிடப்பட்டது ரூ.76 ஆயிரம் கோடி ஆகும். தற்போதைய பட்ஜெட்டில் ரூ.9,500 கோடி குறைத்து ரூ.61 ஆயிரத்து 500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள் ளது. இதனை விவசாய தொழி லாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு வன்மையாக கண் டிக்கிறது. ஆகவே, ஊரக வேலை திட் டத்தில் வேலை நாட்களை 250 நாட்களாக உயர்த்த வேண்டும். தினக்கூலி ரூ.600 ஆக உயர்த்த வேண்டும். குறைந்தபட்சம் ரூ.2  லட்சம் கோடியை இத்திட்டத் திற்கு உயர்த்தி வழங்க வேண் டும். சமூக பாதுகாப்பு திட்டங்க ளுக்கு நிதி ஒதுக்கீட்டை கூடுத லாக வழங்க வேண்டும். மேலும் விரைவில் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப் படவுள்ளது. அதில் கிராமப்புற ஏழை விவசாயிகளையும், விவசா யத் தொழிலாளர்களையும் கவனத்தில் கொண்டு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாது காக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும். விவ சாயிகளின் கடன்களை முற்றிலு மாக தள்ளுபடி செய்வதுடன், உற்பத்தி செய்யும் விளை பொருட் களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசு, மாநில  பொதுச்செயலாளர் வீ.அமிர்த லிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர், மாநில செயலாளர் ஜி.கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள், மாநில குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர்.

;