திருப்பூர், மார்ச் 14- அவிநாசியில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துமாறு ஆ.ராசா எம்.பி,. கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு, நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசா அனுப்பியுள்ள கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட அவிநாசி அரசு மருத்துவமனையில் நாள் தோறும் சுமார் 700க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல் கின்றனர். ஆனால், இங்கு உள்நோயாளிகளுக்கென்று 42 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. மேலும், இம்மருத்துவமனை அருகில் தேசிய நெடுஞ் சாலை அமைந்துள்ளது. இருப்பினும், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டுபவர்கள் மற்றும் அவசர சிகிச்சைக்காக வரு பவர்களுக்கு இங்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக் கப்படுகிறது. இதன்பின் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எனவே, இம்மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும். மேலும், 120 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி, தரம் உயர்த்த வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.