tamilnadu

img

விவசாய நிலத்தில் அனுமதியின்றி உயர் மின் கோபுரம் அமைக்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்

மேச்சேரி, ஏப். 21-மேச்சேரி அருகே விவசாய நிலத்தில் அனுமதியின்றி உயர் மின் கோபுரம் அமைக்க வந்த அதிகாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ளநாகோசிப்பட்டி என்ற ஊரைச்சேர்ந்தவர்கள் பெருமாள் மற்றும்ஆண்டியப்பன். அண்ணன் தம்பிகளான இவர்களுக்கு சொந்தமான பிரிக்கப்படாத கூட்டு நிலம் உள்ளது. இதில் பெருமாள் என்பவரிடம் மட்டும் பணத்தை தருவதாகச் சொல்லி ஆசை காட்டி ஒப்புதல் பெற்று உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் ஞாயிறன்று பவர்கிரிட் நிறுவனத்தினர் ஈடுபட்டனர்.ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நில உரிமையாளர் ஆட்சேபனை செய்துவிட்டால் பவர்கிரிட் நிறுவனம் மாவட்ட ஆட்சியரின் முன் நுழைவு அனுமதி இல்லாமல் திட்டப் பணிகளை தொடங்க கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுஇரண்டு நில உரிமையாளர்களுக்கு சொந்தமான பொதுச் சொத்தில் ஒருவரிடம் மட்டும் பணம் தருவதாக ஆசை வார்த்தைகூறி ஒப்புதல் பெற்று இன்னொருவரின் அனுமதி இல்லாமல் திட்ட பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்கு நிலத்தின் மற்றொரு உரிமையாளரான ஆண்டியப்பன் திட்டப்பணிகளை தொடர்வதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.இது சம்மந்தமாக தமிழ்நாடு விவசாய சங்க நாமக்கல் மாவட்டசெயலாளர் பெருமாள் தலைமையில் வழக்கறிஞர் சரவணன், ஜலகண்டாபுரம் மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜாத்தி, மேச்சேரி சிபிஎம் செயலாளர் மணிமுத்து, ரத்தினவேலு, வாழப்பாடி அன்பு, பெரும்பாலை ரவி, பச்சையப்பன், வெடிகாரனூர் பச்சையப்பன், முருகன் உள்ளிட்ட அனைத்து நில உரிமையாளர்களும், பாதிக்கப்பட்டவர்களும் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் மேச்சேரி காவல் ஆய்வாளர்ஆகியோரை சந்தித்து உயர்நீதிமன்ற தீர்ப்பு நகலைக் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து களத்திற்குச் சென்று அத்து மீறி நடந்தவேலைகளை தடுத்து நிறுத்தினர். மேலும் உயர் மின் கோபுரம் அமைக்ககொண்டு வரப்பட்டபொருட்களை அப்புறப்படுத்தினர்.

;