tamilnadu

தருமபுரி மற்றும் சேலம் முக்கிய செய்திகள்

நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கிடுக தொப்பம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை 
தருமபுரி, ஜூன் 20- மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொப் பம்பட்டி கிராமத்தில் நூறுநாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தொப்பம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் சுமார் 500க்கும் மேற் பட்டவர்கள் இவ்ஊராட்சியில் வேலை செய்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டுகளாக இத்திட்டத்தின் மூலம் வேலை வழங்கப்படவில்லை. இக்கிராம மக்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவந்த சூழலில், தற்போது நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்காததால்  இம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தொப்பம்பட்டி கிராமமக்களுக்கு உடனடி யாக நூறுநாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் அருகே லாரி மோதி பெண் பலி
சேலம், ஜூன் 20- சேலம் அருகே தாரமங்கலத்தில் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் உள்ள ஆசிரியர் காலனியில் கிறிஸ்டி அகல்யா ராணி என்பவர் தனது 12 வயது மகள் கிரேவியுடன் வசித்து வருகிறார். தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மகளை வழக்கம் போல் மாலை ராணி பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அப்போது தாரமங்கலம் சாலையோரம் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியே வேகமாக வந்த லாரி  ராணியின் மீது மோதியதில் லாரியின் சக்கரங்களுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் லாரியை  நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.  இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தாரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியை  பறிமுதல் செய்த காவல்துறையினர், தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.