சேலம், ஜூன் 16- முன்னாள் படைவீரர் கள் மற்றும் கைம்பெண்கள் சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக் குநர் அலுவலகத்தில் விண் ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் தெரி வித்துள்ளதாவது, தமிழ் நாட்டினை பூர்வீகமாக கொண்ட முப்படைகளில் ஹவில்தார் மற்றும் அதற்கு இணையான தகுதியில் ராணுவத்திலிருந்து வெளி வந்த பின்னர் மத்திய, மாநில அரசு பொதுத்துறை, அரசு சார் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் நிரந்தர மறு வேலை வாய்ப்பு, வேலைவாய்ப்பு பெறாத முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்தம் கைம்பெண்களுக்கு 2020-2021 நிதி ஆண்டு முதல் வங்கி கடன் பெற்று சொந்த மாக புதிய வீடு கட்டுவதற்கு மற்றும் வாங்குவதற்கும் சில நிபந்தனைகளுக்கு உட் பட்டு ரூ.1 லட்சம் மானியம் தமிழ்நாடு முன்னாள் படை வீரர் நல நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
எனவே, தகுதியுள்ள சேலம் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்கள் சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக் குநர் அலுவலகத்தில் விண் ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெ றலாம் என மாவட்ட ஆட்சி யர் சி.அ.ராமன் தெரிவித் துள்ளார்.