tamilnadu

img

நீரை சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

 சேலம், ஜூலை 22- கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேஷன் சார்பில் நீரை சேமிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேஷன் சார்பில் நீரை  சேமிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் சண்முகா மருத்துவமனை கலைய ரங்கத்தில் நடைபெற்றது. இதில் கவிஞரும், சமூக சிந்த னையாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான க.பால பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெ.எம்.பூபதி, கௌரவத் தலை வர் மருத்துவர் பி.எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.