அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தீபாவளிக்கு முன்பாக அகவிலைப் படியை வழங்கக்கோரி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு திங்க ளன்று (அக் 13), தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வருவாய் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், செந்தில்முருகன் ஆகியோர் தலைமையில், ஊழியர்கள் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
