மரூர் ஊராட்சியில் தண்ணீர் பிரச்சனை வாலிபர் சங்கம் நூதனப் போராட்டம்
கள்ளக்குறிச்சி, ஜூலை 23 - கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட மரூர் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக கிராமத்தில் உள்ள வடக்கு தெரு மற்றும் ஐந்து தெருக் களுக்கு பல ஆண்டுகளாக குடிநீர் விநி யோகம் என்பது இல்லாமல் தண்ணீர் தட்டுப் பாட்டால் மக்கள் அவதிப்படும் நிலைமை நீடித்து வந்தது. இதையடுத்து, 2022-23 ஆம் ஆண்டு களில் 34 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டிமுடிக்கப்பட்டது.ஓராண்டு காலமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல் அப்படியே கிடப்பில் கிடந்தது. அதுவும் தரமற்ற முறையில் கட்டப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடனே திறக்க கோரியும் மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு மாலை அணிவித்து, பால் ஊற்றி, சடங்கு செய்யும் போராட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க துணை தலைவர் சி.உத்திராபதி தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் மு.சிவகுமார், மாவட்ட துணைச் செயலாளர் எம்.உத்திரக்கோட்டி, ஒன்றியத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வன், சிபிஐ எம் மாவட்டக் குழு ப.அம்பிகா, கிளை நிர்வாகிகள் எஸ்.அன்பு, சத்தியமூர்த்தி மற்றும் கிராம பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிபிஎம் மூத்த தலைவர் தோழர். வி.எஸ். அச்சுதானந்தன் மறைவிற்கு சிபிஎம் கலவை தாலுகா குழு சார்பில் செவ்வாயன்று (ஜூலை 22) கலவை தாலுகா செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் வாழைப்பந்தல் பேருந்து நிலையம் அருகில் வீரவணக்கம் கூட்டம் நடைபெற்றது. இதில் வட்ட குழு உறுப்பினர் கே. வெங்கடேசன், கிளை செயலாளர் பி. தேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிபிஎம் மூத்தத் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவிற்கு பொன்னேரியில் இரங்கல் தெரிவித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் ஆர்.காளமேகம், எம்.நாகராஜ், பாலு, விஜய், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.