ஓசூர்-கிருஷ்ணகிரி ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் வாலிபர் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு கோரிக்கை
வாலிபர் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு கோரிக்கை
கிருஷ்ணகிரி, ஆக.8- ஓசூர்-கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மாவட்டத்தில் உள்ள தனியார் நிறு வனங்களில், தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பை பெருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாலிபர் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை வைத்துள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18ஆவது மாவட்ட மாநாடு தேன்கனிக்கோட்டையில் மாவட்டத் தலை வர் சக்தி தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் மாரிமுத்து, ஹரி நந்தா, சங்கர், புருஷோத்தம ரெட்டி, கோபி முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் திவாகர் வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் கணேஷ் அஞ்சலி வாசித்தார். மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.இளவரசன் வேலை அறிக்கையும், பொருளாளர் முருகன் வரவு செலவும் சமர்ப்பித்தனர். வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சி.எம்.பிரகாஷ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், முன்னாள் மாவட்டத் தலைவர் அனுமப்பா, இடதுசாரி செயற்பாட்டாளர் பி.நாகராஜ் ரெட்டி வாழ்த்திப் பேசினர். மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் நிறைஉரை யாற்றினார். தளி ஒன்றியத் தலைவர் அம்ரிஷ் நன்றி கூறினார். தீர்மானம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில், தொழிற்சாலை களில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையை பன்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தங்கு தடையின்றி விற்பனையாகும் போதை பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும், அரசு பள்ளி கல்லூரிகள் ஆசிரியர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்து வர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊத்தங்கரையில் அரசு கலை அறி வியல் கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக ஆர்.நஞ்சா ரெட்டி, செயலாளராக கே.இளவரசன், பொருளாளராக கணேஷ் உள்ளிட்ட 21 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.