தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வடசென்னை மாவட்டத்தில் இளம் விஞ்ஞானிகள் மாநாடு பெரம்பூர் கே.ஆர்.எம். பள்ளியில் நடைபெற்றது. 60 குழுக்கள் கலந்து கொண்டு, தங்களின் ஆய்வுகளை செய்து காட்டினர். இதில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட 4 குழுக்கள் வேலுரில் நடைபெறும் இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.