சென்னை, மார்ச் 1 - இடதுசாரி எழுத்தாளரும், முற்போக்கு சிந்தனையாளருமான ராசேந்திரசோழன் எனும் அஸ்வகோஷ் உடல்நலக்குறைவால் வெள்ளியன்று (மார்ச் 1) காலமானார். அவருக்கு வயது 77. பார்க்கின்சன் எனும் நடுக்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், எழும்பூரில் உள்ள அவரது மகன் நீதிபதி பார்த்திபன் இல்லத்தில் காலமானார்.
அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, தமுஎகச மாநிலப்பொருளாளர் சைதை ஜெ, முன்னாள் மாநில நிர்வாகி இரா.தெ.முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் அ.உமர்பாரூக், மாநிலக்குழு உறுப்பினர் சிராஜ் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து அவரது உடல் மருத்துவ ஆராய்சிக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப் பட்டது. தமுஎகச இரங்கல் புனைவிலக்கியத்திற்கும் முற்போக்கு கருத்துலகிற்கும் 1970கள் முதலாக காத்திர மான பங்களிப்பினைச் செய்துவந்தவர் அஸ்வகோஷ் எனும் தோழர் ராசேந்திர சோழன். “17.12.1945 அன்று உளுந்தூர்பேட்டை யில் பிறந்த ராசேந்திரசோழன், விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான, தோழர் கே.முத்தையாவின் தலைமையில் தீவிரமாக இயங்கியவர். சிறுகதைகள் மட்டுமின்றி ஏராளமான அரசியல், வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். அவரது முதல் சிறுகதைத்தொகுதியான ‘பறிமுதல்’ போலவே பின்னர் வந்த ‘எட்டுக் கதைகள்’ தொகுப்பும் பரவலான கவனம் பெற்றது. பத்துக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் வெளி யிட்டுள்ளார்.
பாதல் சர்க்காரின் நாடகப் பட்டறையில் பயிற்சி பெற்று, பல நாடகங்களை இயக்கி அரங்கேற்றியவர். அவசர நிலைக்கு எதிரான அவரது ‘விசாரணை’ என்கிற நாடகம் பல ஊர்களில் நிகழ்த்தப்பட்டது. தமுஎசவுக்கு நாடக முகத்தை வழங்கிய முன்னோடி. பல மாவட்டங்களில் நாடகப்பட்டறை நடத்தி தமுஎச நாடகக்குழுக்களை உருவாக்க உதவினார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிற்காலத்தில் தமுஎசவிலிருந்து விலகி யிருந்தாலும் இறுதிவரை ஓர் இடதுசாரி யாகவே வாழ்ந்தவர். முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு பெரும்பங்காற்றி மறைந்துள்ள தோழர் ராசேந்திர சோழன் மறைவுக்கு தமுஎகச தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது” என்று தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இரா மலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.