உலக அளவிலான அபாகஸ் போட்டி
உளுந்தூர்பேட்டை மாணவருக்கு தங்கப்பதக்கம் கள்ளக்குறிச்சி,ஜூலை 30 - கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மாணவன் மங்கோலி யாவில் நடைபெற்ற உலக அளவிலான அபாகஸ் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அபாகஸ் போட்டிகள், குழந்தைகளிடையே மனக் கணக்கு திறனை மேம் படுத்தும் ஒரு வழியாகும். இந்த போட்டிகளில், அபாகஸ் கருவியைப் பயன்படுத்தி மாணவர்கள் விரைவாக கணிதப் பிரச்ச னைகளை தீர்க்க பயிற்சி செய்கிறார்கள். இவை தேசிய மற்றும் சர்வதேச அளவுகளில் நடத்தப்படுகின்றன, மேலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப் ப்படுத்தவும், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பெறவும் ஒரு தளமாக உள்ளன. அபாகஸ் போட்டிகளில் பங்கேற்பது மாணவர்களுக்கு பல நன்மைகளைத் தருகிறது, இதில் மனக்கணக்கு திறன் மேம்பாடு, தன்னம்பிக்கை அதிகரிப்பு மற்றும் கணிதத்தில் ஆர்வம் போன்றவை அடங்கும். உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இந்திரா குமார் கோதைநாயகி இவரின் மகன் சரபேஷ் விக்ரமன் என்ற மாணவன் மங்கோலியா நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான அபாகஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு இந்த அபாகஸ் போட்டியில் விளையாடி வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொண்ட போட்டியாளர்களின் மத்தியில் பல்வேறு சுற்றுகளுக்கு இடையே வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இவர் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
                                    