உலக இதய நாள் ஞாயிறன்று (செப்.29) கடைபிடிக்கப்பட்டது. வடபழனி சிம்ஸ் மருத்துவமனை சார்பில் இதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் இருந்து அண்ணா நகர் வி.ஆர். மால் வரை நடை பயணம் நடைபெற்றது. இதனை நடிகர் தினேஷ் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவமனையின் துணைத்தலைவர் டாக்டர் ராஜூ சிவசாமி, மருத்து வர்கள், செவிலியர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.