tamilnadu

img

பிடிபட்டது காட்டுயானை ‘ரோலக்ஸ்’

பிடிபட்டது காட்டுயானை ‘ரோலக்ஸ்’

கோவை, அக்.17- தொண்டாமுத்தூர் மற்றும் நரசி புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவ சாய நிலங்களைச் சேதப்படுத்தி, ஊருக் குள் உலா வந்து விவசாயிகளைப் பெரி தும் அச்சுறுத்தி வந்த ‘ரோலக்ஸ்’ என்ற காட்டு யானையை, ஒரு மாத கால  தேடுதல் வேட்டைக்குப் பிறகு வனத்து றையினர் வெற்றிகரமாகப் பிடித்து டாப்ஸ்லிப் யானைகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். விவசாயிகளை தொடர்ந்து அச்சு றுத்தி வந்த ரோலக்ஸ் யானையைப் பிடித்து இடம் மாற்றம் செய்ய வேண்டு மென விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன டிப்படையில், ரோலக்ஸ் யானையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் கடந்த ஒரு மாதமாகத் தீவிரமாக ஈடு பட்டு வந்தனர். இந்தச் சூழலில், கடந்த செப்.16 ஆம் தேதி இரவு ரோலக்ஸ்  யானைக்கு மயக்க ஊசி செலுத்த  முயன்ற கால்நடை மருத்துவர் விஜயரா கவனை அந்த யானை தாக்கியது. இந்நி லையில், வெள்ளியன்று அதிகாலை 4  மணியளவில் தொண்டாமுத்தூர் இச் சிக்குழி அருகே, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வெங்கடேசன் மேற் பார்வையில், கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத் துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா ஆகி யோர் கொண்ட குழுவினர் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கபில்தேவ், வாசிம், பொம் மன், சின்னத்தம்பி ஆகிய நான்கு கும்கி யானைகளின் உதவியோடு வனத்துறை யினர் ரோலக்ஸ் யானையை கட்டுப் படுத்தினர். பின்னர், வாகனத்தில் ஏற் றப்பட்ட ரோலக்ஸ் யானை, பாதுகாப் பாக டாப்ஸ்லிப் யானைகள் முகாமிற்கு  அனுப்பி வைக்கப்பட்டது. ரோலக்ஸ்  யானை பிடிபட்டதால், அப்பகுதி விவசா யிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.