மர்மமான முறையில் உயிரிழந்த “அக்னி வீரர்”
அக்னிபாதை திட்டம் மூலம் பணியமர்த்தப் பட்ட அக்ஷய் லட்சுமண் என்ற வீரர் சியாச்சினில் பணியின் போது உயிரிழந்துள்ளதாக லே-வை தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் பையர் படைப்பிரிவு தெரி வித்துள்ளது. உயிரிழந்த அக்னிவீரருக்கு இந்திய ராணுவம் மரியாதை செலுத்திய நிலையில், அக்ஷய் லட்சுமண் உயிரிழந்ததற்கான காரணம் தொடர்பாக ராணுவம் தரப்பில் இதுவரை தெரிவிக்கவில்லை. கடந்த அக்., 11 அன்று பஞ்சாப்பை சேர்ந்த அம்ரித்பால் சிங் என்ற அக்னி வீரர் ஜம்மு - காஷ்மீரில் பணியின் போது உயிரிழந்தார். அம்ரித்பால் சிங் தற்கொலை செய்து உயிரிழந்ததாக கூறிய ராணுவம் அவருக்கு இறுதிச் சடங்கு அளிக்காமல் புறக்கணித்தது.