tamilnadu

img

திருவண்ணாமலை மாவட்டத்தில் நலம் காக்கும் திட்டம் துவக்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் நலம் காக்கும் திட்டம் துவக்கம்

திருவண்ணாமலை, ஆக. 2- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆகியோர் கலந்து கொண்டனர். “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் சிகிச்சை மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல், மகப்பேறியல் மற்றும் மகளிர், எலும்பியல், நரம்பியல், மனநலம், நீரிழிவு, நுரையீரல், இருதயவியல், தோல், குழந்தை மருத்துவம், கதிரியக்கவியல், பிசியோதெரபி, ஆயுஷ் மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்படும். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. சிறுமியை ஆபாசமாக படம்பிடித்த பேருந்து ஓட்டுநர் கைது விழுப்புரம், ஆக.2- கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் ஞானவேல் என்ற ஓட்டுநராக பணி யாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு கேரளாவில் இருந்து சென்னைக்கு வழக்கம் போல பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கேரளாவை சேர்ந்த 9 வயது சிறுமியும் ‘அவரது தாயாரும் பயணம் செய்த னர். ஓட்டுநருக்கு இருக்  கைக்கு பின்புறம் உள்ள இருக்கை யில் அமர்ந்து  அவர்கள் இருவரும் பயணித்துள்ள னர். அப்போது, சிறுமியை ஆபாசமாக தனது செல்போனில் ஞானவேல் படம் பிடித்துள்ளார். இதை சிறுமி பார்த்துவிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி மற்றும் அவரது தாயார், அநாகரிக செயலில் ஈடுபட்ட ஓட்டுநருக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தனர்.   பேருந்து விழுப்பு ரத்திற்கு வந்ததும், காவல் நிலையத்தில் பெண் புகரார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஓட்டு நர் ஞானவேலை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.