தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டைகள்
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், ஜமின் தண்டலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினார். உடன் திருபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.