திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் நடைபெற்ற பழங்குடி மக்களுக்கான சிறப்பு முகாமில் சாதிச் சான்று, ஆதார், குடும்ப அட்டை, நலவாரிய அட்டை ஆகிய அடிப்படை தேவைகளை வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 8 பேருக்கு நலவாரிய புத்தகத்தை வட்டாட்சியர் வழங்கினார். இந் நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப. செல்வன், வட்டார செயலாளர் ரவிதாசன், நிர்வாகிகள் ஆர்.சிவாஜி, பி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.