tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

நடுத்தர மக்களுக்கான சுகாதார  காப்பீட்டு திட்டத்திற்கு வரவேற்பு

சென்னை,ஜூலை15- நடுத்தர மக்களுக்கான சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சுகாதார காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனத்தின் தென்னிந்திய துணைத் தலைவர் தர்வேஷ் முகமது, நடுத்தர’ மக்கள் தொகையில் கவனம் செலுத்திய சர்வா என்ற திட்டம் 2025 ஜனவரி முதல் மே வரை தமிழ்நாட்டில் நிறுவனத்தின் புதிய வணிகத்தில் 52 விழுக்காடு பங்களித்தது என்றார். இந்த திட்டத்தில் சேர்ந்த முதல்நாளே மருத்துவ காப்பீட்டு பயன்பாட்டை அனுபவிக்கலாம் என்றும் அவர் கூறினார். 2026 நிதியாண்டில் தென்னிந்தியா முழுவதும் 10 கிளைகளுடன் தனது இருப்பை விரிவுபடுத்தவும், 10,000க்கும் மேற்பட்ட ஆலோ சகர்களை சேர்க்கவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை சந்தையிடல் அதிகாரி சப்னா தேசாய் தெரிவித்தார்.  2025 நிதியாண்டில் தமது நிறுவனம் மாநிலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பீடு செய்துள்ளது என்றும்  கடந்த மூன்று ஆண்டுகளில், மாநிலத்தில் ரூ. 101 கோடி மதிப்புள்ள கோரிக்கைகளை தீர்த்து வைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.