tamilnadu

img

40 தொகுதிகளிலும் நமக்கே வெற்றி

“புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகை யில் பரப்புரை செய்ய வேண்டும்” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளார்.