tamilnadu

img

வயநாடு நிவாரண நிதி ரூ.63,270 வழங்கிய விவசாயத் தொழிலாளர் சங்கம்

கொடைக்கானல், ஆக.16 - அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஆக.13, 14 தேதி களில் திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானல் மலையில் நடைபெற்றது. 

மாநிலக்குழு உறுப்பி னர்கள், மாவட்டக் குழுக்கள்  மூலம் வரப் பெற்ற வயநாடு  நிவாரண நிதி ரூ.63,270/-ஐ  சங்கத்தின் இணைச் செய லாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வி.சிவ தாசனிடம் மாநில நிர்வாகி கள் வழங்கினர்.

அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட், அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், மாநிலத்  தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், மாநிலச் பொருளா ளர் அ.பழநிசாமி, மாநில துணைத் தலைவர் பி. வசந்தாமணி, மாவட்டச் செயலாளர் அருள்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.