விழுப்புரம் நகராட்சி சாலையில் பாசி படர்ந்து தேங்கும் கழிவு நீர்
விழுப்புரம், செப்.19 - விழுப்புரத்தில் 365 நாட்களும் இந்த ஒரு தெருவில் மட்டும் பசுமை புரட்சி நிறைந்த ‘பச்சை கழிவு’நீர் தெருவாக காட்சிய ளிக்கும் அவலம் தொடர் கதையாகே தொடர்கிறது என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். விழுப்புரம் நகராட்சி பகுதியில் திடீர், திடீரென மழை பெய்தால் போதும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். பின்பு சில நாட்கள் கொசு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களை உற்பத்தி செய்து, இனம்புரியாத மர்ம நோய் தாக்குவது வாடிக்கையாக உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் புதிய பேருந்து நிலையம் சுற்றிலும் மட்டுமில்லாமல், பக்கத்தில் உள்ள விஜிபி நகரில் இந்த ஒரு தெருவில் மட்டும் 365 நாட்களும் தேங்கி கிடக்கும் கழிவுநீர் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் என்ற காட்சி மட்டும் 365 நாட்களும் மாறாது. ஏனென்றால் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள ஏரிக்கு தண்ணீர் இந்த வழியாக தான் செல்கிறது என்று சில ஆண்டு களுக்கு முன்பு அந்த வாய்க்கால் வழியை அடைத்து விட்டனர். ஆனால் இந்த தெரு முழுவதும் கழிவு நீரும் மழை நீரும் இணைந்து பசுமை நிறைந்த பச்சை நீராக காட்சியளிக்கும். இந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், பல்வேறு கடைகள் என வளர்ந்து வரும் பகுதியாக மாறி வருகிறது. இந்த பகுதி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது. ரூ.8 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலை யத்தில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கு வதை மின் மோட்டார் அமைத்து உள்ள னர், ஆனால் தண்ணீர் வெளியேற்ற வசதிகள் உள்ள இந்த நகராட்சி, இங்கு தேங்கி கிடக்கும் இந்த தண்ணீரை வெளியேற்று வதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச் சாட்டை எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.