கடலில் அடித்துச் செல்லப்பட்ட 32 மாடுகள்
கடலூர், டிச.5- கடலூர் தேவனாம்பட்டி னம் பகுதியில் முகத்து வாரத்தில் இறங்கிய 32 எருமை மாடுகள் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டன.
கடலூர் முதுநகர் பகுதி யைச் சேர்ந்த கேசவன், கண்ணையன், குணா, மனோகர் உள்ளிட்ட 7 குடும்பங்களுக்கு சொந்த மானவை இந்த மாடுகள். 60க்கும் மேற்பட்ட மாடுகள் தேவனாம்பட்டினம் பகுதி யில் மேய்ந்து கொண்டிருந்த போது, கெடிலம் ஆற்றின் நீர் கடலில் வடிவதற்கு வெட்டப்பட்ட முகத்துவாரத்தில் இறங்கிய போது நீரில் அடித்துச்செல்லப்பட்டன. தண்ணீர் வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் 32 மாடுகள் அடித்து செல்லப்பட்டு விட்டது. உரிமையாளர்கள் காவல் நிலையம் சென்றால் வீடியோ ஆதாரம் இருந்தும் புகாரை எடுக்க மறுப்பதாக கூறுகின்றனர்.
காவல் நிலைய புகார் இருந்தால் மட்டுமே நிவாரண தொகைக்கு கணக்கெடுக்க முடியும் என கிராம நிர்வாக அலுவலர் தெரிவிப்பதாகவும் உரிமை யாளர்கள் குற்றஞ்சாட்டினர். ஒவ்வொரு மாடும் ரூ.50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையில் மதிப்புடையது என தெரிவித்துள்ளார்.
லிப்டில் சிக்கிய 11 பேர் மீட்பு
சென்னை ,டிச.5- சென்னை மாத வரத்தில் உள்ள திருமண மண்ட பத்தில் லிப்டில் சிக்கித் தவித்த 11 பேர் மீட்கப்பட்ட னர். திருமண மண்டபத்தில் 11 பேர் சென்ற லிப்ட் திடீரென பழுதாகி நின்றது. தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக லிப்ட் கதவு திறக்கப்பட்டு 11 பேரும் மீட்கப்பட்டனர்.
ரூ.2 ஆயிரம் நிவாரணம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்
கள்ளக்குறிச்சி, டிச. 5- பெஞ்சல் புயல்-கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் ரூ.2 ஆயிரம் நிவாரண உதவிக் தொகையை வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, வழங்கினார். திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட வெள்ளைப் பிள்ளையார் கோவில் தெரு, பொங்கல் மேட்டுத் தெரு,கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் ,5 கிலோ அரிசி,1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு உள்ளிட்ட நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், சார் ஆட்சியர் ஆனந்த் குமார்,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், திருக்கோவிலூர் நகர்மன்றத் தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம்
கடலூர், டிச.5 – கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி பயிலகத்தில் பயிலும் மாணவர்கள் குளத்தில், குளிக்கும் போது ஒரு மாணவர் மட்டும், நீரில் மூழ்கினார்.
செம்மண்டலம் அரசு தொழில்நுட்ப கல்வி பயிலகத்தின் பயிலும் 6 மாணவர்கள் குமராபுரம் ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள குளத்தில் குளிக்கும் பொழுது, குரு என்பவரின் மகன் கதிர் (17) கோண்டூர் என்ற மாணவர் மட்டும் நீரில் முழுகி குளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை தீயணைப்புத் துறையினர் தேடி வரு கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
சாலையில் விழுந்த 2 டன் இரும்பு உபகரணம்
சென்னை, டிச.5- தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுசென்றபோது 2 டன் எடையுள்ள இரும்பு உபகரணம் சாலையில் விழுந்தது. சிமெண்ட் பாறையை தயாரிக்க பயன்படும் ஸ்டார் வடிவிலான பேட்டன் எனக்கூடிய நான்கு ராட்சத இரும்பு உபகரணம் செவ்வாயன்று வெளிநாட்டிலிருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகம் கொண்டுவரப்பட்டு பின்னர் அங்கிருந்து டிரெய்லர் லாரியில் ஏற்றி, எண்ணூர் விரைவு சாலையில் கொண்டுவரப்பட்டது. திருவொற்றியூர் அருகே திருச்சினாங்குப்பம் அருகே வந்தபோது லாரியில் இருந்த ஒரு ராட்சத இரும்பு உபகரணம், பெல்ட் அறுந்து கீழே உருண்டது. அதன் எடை சுமார் 2 டன் இருக்கும்.