சென்னை,ஜூலை 10- சென்னை, பெருங்களத்தூரில் விஎஸ்ஆர் விளையாட்டு அகாடமியை சர்வதேச பாட்மிண்டன் வீரர் கிடாம்பி சிறீகாந்த் திறந்து வைத்தார். இந்த அகாடமி, ஏறக்குறைய 22533 சதுரஅடியில் அமைந்துள்ளது. மற்றும் பாட்மிண்டன் உள்கட்டமைப்பு வசதி யானது பாட்மிண்டன் உலக கூட்டமைப்பு தரத்திற்கிணங்க மரத்தினாலான தரையமைப்புடன் 18878 சதுர அடியில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று இந்தியா ஸ்போர்ட்ஸ் ஃபுளோரிங்ஸ் மேலாண்மை இயக்குனர் மனேந்திரா கூறினார். துவக்க நிகழ்ச்சியில் பேசிய விஎஸ்ஆர் குழுமங்களின் தலைவர் ஏ. சீதாராம் தொடக்க வீரர்கள், இடைப்பட்ட வீரர்கள், முன்னேறிய வீரர்கள் என அனைத்து பிரிவினருக்கும் இங்கே வாய்ப்பு உண்டு. சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ்நாடு ஜூனியர் ஓபன் போட்டி நடத்துவதற்கும் நலிந்த பிரிவைச் சேர்ந்த நான்கு வீரர்க ளுக்கும், வெற்றி பெறுபவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.