tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

1.‘இந்தியா’ கூட்டணியின் திண்டுக்கல் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக திண்டுக்கல் நகர் பகுதிகளில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தின் போது, நூதன முறையில் திக பிரச்சார செயலாளர் சம்பத் குடுகுடுப்பை காரர் போல வேடமிட்டும் குடுகுடுப்பை அடித்தும் நல்ல காலம் வந்திருச்சு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்த இந்தியர்களிடையே மதவெறியை விதைத்த அரசை அகற்றிடும் காலம் வந்திருச்சு. ஏப்ரல் 19 தான் அந்த நல்ல காலம் அன்றைய தேதியில் ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களியுங்கள்” என பிரச்சாரம் மேற்கொண்டார்.

2.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, திண்டுக்கல் மற்றும் மதுரை தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள, வெள்ளியன்று காலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் வரவேற்றார். உடன் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயினார்.