அரசு பள்ளிக்கு மேற்கூரை அமைத்து கொடுத்த தன்னார்வலர்
அறந்தாங்கி, அக். 11- புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத் தாங்கோட்டை மேற்கு பள்ளியில் மழை மற்றும் வெயில் காலங்களில் மாணவர்கள் உணவு அருந்துவதற்கு மிகப்பெரிய இடர்பாடு இருந்து வந்தது. அதனை சரி செய்யும் பொருட்டு, பள்ளிக்கு என்றும் உறுதுணையாக இருந்து வரும் தன்னார்வலர் அன்பு பிரகாஷ் என்பவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது கோயம்புத்தூர் நண்பர்களின் உதவியோடு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்கள் அமர்ந்து உண்பதற்காக மேற்கூரை அமைத்து கொடுத்துள்ளார். ஆவணத்தாங்கோட்டை மேற்கு பள்ளி ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊர் இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள், காலை உணவு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாக நன்றி தெரிவித்தனர்.