நூறுநாள் வேலை திட்ட நிலுவை ஊதியம் கேட்டு விதொச பிரச்சாரம்
நூறு நாள் வேலை திட்ட நிலுவை ஊதியமாக காஞ்சிபுரம் மாவட்டத் திற்கு வரவேண்டிய சுமார் ரூபாய் 45 கோடி பணத்தை ஒன்றிய மோடி அரசு உடனே வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் துண்டு பிரசுரம் வினியோகித்து பிரச்சரத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தமிழகம் முழுவதும் பணியாற்றிய தொழிலாளர் களின் கூலி ஆறு வாரங்களுக்கு மேல் பாக்கியுள்ளது.அதனை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணி செய்துள்ள ஏராளமான தொழிலாளர் களுக்கு சுமார் ரூபாய் 45 கோடி நிலுவை பணத்தை உடனடியாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு கூலி பாக்கி ரூ.1652.45 கோடியை சட்ட விரோதமாக 4 மாதமாக தர மறுக்கும் கோடி அரசை கண்டித் தும். 15 நாட்களுக்குள் கொடுக்கப்படாத ஊதியத்திற்கு ஊரக வேலையுறுதியளிப்பு சட்டத்தின் படி வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும். தேவையற்ற காலதாமதம் செய்யும் ஒன்றிய நிதி அமைச்சகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தின் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் சி.சங்கர் தலைமையில், களக்காட்டூர், குருவி மலை, வளத்தோட்டம், கமுகம்பள்ளம், கே.எஸ்.பி நகர், பழங்குடியினர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் துண்டு பிரசுரம் விநி யோகித்து பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதில் சிபிஎம் காஞ்சிபுரம் வட்டச் செய லாளர் எஸ்.பழனி, மாவட்டக்குழு உறுப்பி னர் வி.சிவப்பிரகாசம், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட பொருளாளர் வி.ஹரிகிருஷ் ணன், ஏ.சீனிவாசன், வி.ரமேஷ், எம்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.