tamilnadu

விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

ஸ்ரீ ரங்கபூபதி கல்லூரியில் புதிய பாடப்பிரிவு துவக்கம்

விழுப்புரம், ஆக. 2- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி யில் உள்ள ஸ்ரீரங்கபூபதி  காலேஜ் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக ஏ.என்.எம்., பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாளாளர் ரங்கபூபதி கூறுகையில், கல்வி நிறுவனத்தின் கீழ் ஏற்கனவே பி.எஸ்சி., நர்சிங்,  டிப்ளமோ நர்சிங், பார்மஸி,  பொறியியல், பாலிடெக்னிக், பி.எட்., எம்.எட்., பி.எஸ்சி., பி.எட்., ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட பாடப் பிரிவுகள் உள்ளன. இந்நிலையில் இந் தாண்டு புதிதாக அரசு மருத்துவமனையில் அதிக வேலை வாய்ப்புள்ள ஏ.என்.எம்., பாடப் பிரிவு துவங் கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஏ.என்.எம்., இரண்டாண்டு பயிற்சி வகுப்பு முடித்தவுடன் மாண வர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு உரு வாகும்.  தற்போது  கல்லுாரியில் மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது என தெரி வித்தார்.

திடீரென அதிகரித்த மின்சாரக் கட்டணம் சென்னையில் அதிர்ச்சி

சென்னை,ஆக.2 மின்சாரம் உடலில் பாய்ந்தால்தான் ஷாக் அடிக்கும். ஆனால் மின் கட்டணம் பற்றிய தகவல் காதில் விழுந்ததுமே  ‘ஷாக்‘ அடித்தது போல் அதிர்ச்சியில் உறைந்து போன சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை கோட்டூர் 4-வது மெயின் ரோடு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் மின் கட்டணத்தை கேட்டதும் தலை சுற்றி விழாத குறையாக அதிர்ந்து போனார்கள்.நேபருண் கோஷ் என்பவர் ரூ.2 ஆயிரம் முதல் 2500 வரை மின் கட்டணம் செலுத்தி வந்தார். ஆனால்இந்த மாதம் ரூ.13,258 கட்டணம். இதேபோல் வினீத்சிங்கல் மாதம் ரூ.7 ஆயிரம் வரை மின்  கட்டணம் செலுத்தி வந்தார். இந்த மாதம் ரூ.14,500 கட்டணம். ரெட்டி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் இதுவரை ரூ.2 ஆயிரம் தான் கட்டணமாக செலுத்தி இருக்கி றார். இந்த மாதம் ரூ.27 ஆயிரம் வந்து இருக்கிறது. அதாவது ஒவ்வொரு வருக்கும் 10 மடங்குக்கு மேல் மின்  கட்டணம் வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். இதுபற்றி அந்த பகுதியில் உள்ள மின் வாரிய அலுவல கத்தில் புகார் செய்திருக்கிறார்கள். இதுபற்றி அதிகாரிகள் கூறும் போது மீட்டரில் பதிவான அளவீடுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீட்டரில் பழுது இருந்தால் மாற்றி கொடுக்கப்படும். தவறான அளவீடு காரணமாகத் தான் இவ்வளவு அதிகமான கட்டணம் வந்திருக்கிறது என்றனர். இதுபற்றி குடியிருப்பு வாசிகள் கூறும் போது, கணக்கி டும் போதே இவ்வளவு அதிக யூனிட் வருகிறதே என்ற சந்தேகம்  கூட ஊழியர்களுக்கு வராமல் போவது ஆச்சரியம் என்றனர்.

சென்னையில் தெருவில் நடமாடும்  58 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி

சென்னை,ஆக 2- சென்னையில் தெருவில் நடமாடும் 58 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பு ஊசி போடும் திட்டத்தை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.தெருவில் சுற்றி திரிந்த நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலை மூலம் பிடித்தனர்.சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தை பின்பற்றி அவற்றை பிடித்து கருத்தடை செய்யப்படுகின்றன. இதனால் தெரு வீதிகளில் அலைந்து திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று கருத்தடை செய்து அதன் வீரியத்தை கட்டுப்படுத்துகின்றனர்.தெரு நாய்களால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலை உருவாவதை தடுக்க வெறிநாய் தடுப்பூசி திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்துகிறது.சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நாய்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தெரு நாய்கள் கடிப்பதால் “ரேபிஸ்” எனும் ‘வெறி நாய்கடி பாதிப்பு’ ஏற்பட்டு சில நேரங்களில் உயிர் இழப்பும் ஏற்படுகிறது.  தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் பெரும்பாலும் பல்வேறு நோய் கிருமிகளால் தாக்கப்பட்டு உள்ளன.அது போன்ற நாய்கள் கடித்தால் சிறுவர்கள் மட்டு மல்ல பெரியவர்களும் உயிர் இழக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் வெறி நாய் கடியில் இருந்து பொது மக்களை பாதுகாக்க வெறி நாய் தடுப்பூசி சிறப்புத் திட்டம் மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் எவ்வளவு தெருநாய்கள் உள்ளன என கடந்த ஆண்டு இறுதியில் கணக்கெ டுக்கப்பட்டது. அதில் 58 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பது தெரிய வந்தது.மாதவரம், அம்பத்தூர் மண்டலத்தில் தான் அதிகளவு தெரு நாய்கள் உள்ளன. தெரு நாய்கள் கடித்தால்கூட எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக வெறிநாய் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக ரூ.77 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மட்டுமல்ல. நாய்களுக்கு குடல் புழு நீக்கம் செய்யவும் மருந்து கொடுக்கப்படுகிறது. தெரு நாய்களும் பாதுகாப்பாக உயிர் வாழ வேண்டும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாநகராட்சி கால்நடை அதிகாரி டாக்டர் கமால் உசேன் தெரிவித்தார். 

தூத்துக்குடிக்கு தப்பி வந்த  மாலத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி உளவுத்துறையினர் தீவிர விசாரணை

தூத்துக்குடி, ஆக. 2- தூத்துக்குடிக்கு கப்ப லில் தப்பி வந்துள்ள மாலத்  தீவு முன்னாள் துணை ஜனா திபதி அகமது அதீப்பிடம் உள வுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  மாலத்தீவு நாட்டின் துணை அதிபராக, 2015ல் பதவி வகித்தவர், அகமது அதீப். இந்நிலையில் இவர் தூத்துக்குடிக்கு கப்பலில் தப்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   தூத்துக்குடியில் இருந்து  கடந்த 11ம் தேதி மாலத்தீ விற்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற டக்கில் இந்தோனேசியாவை சேர்ந்த  8 மாலுமிகளும், தூத்துக் குடியை சேர்ந்த  ஒருவரும் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி சரக்கை இறக்கிவிட்டு தூத்துக்குடி நோக்கி வந்த டக்கில் பத்தாவதாக ஒரு நபர் வந்துள்ளார். இது தொடர்பாக கிடைத்த தக வலை அடுத்து உளவுத் துறையினர் நடுக்கடலில் டக்கில் வந்த பத்தாவது நபர்  குறித்து விசாரணை மேற்  கொண்டனர். இதில் அவர்  மாலத்தீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது  அதீப் எனத் தெரியவந்துள் ளது.  முன்னதாக, பயங்கர வாத வழக்கில் மாலத்தீவு முன்னாள் துணை ஜனாதி பதி அகமது அதீப்புக்கு 10  ஆண்டுகள் சிறைத் தண்  டனை விதித்து அந்நாட்டு  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. புதிய அரசு அமைந்ததால் விடு தலை ஆகி வெளியே  வந்துள்ளாரா அல்லது சிறை யில் இருந்து தப்பி  வந்துள்ளாரா என  உளவுத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

கல்குவாரி உரிமையாளர் கொலை:  மேலும் ஒருவர் சரண்

மதுரை, ஆக. 2-  கல்குவாரி உரிமையாளரை காவல்  நிலையம் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கில் இளைஞர் ஒரு வர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி  காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சாமுவேல் மரிய செல்வம் குமார் என்பவர் கல்குவாரி நடத்தி வந்துள்ளார், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த  இளைஞர்களுக்கு முன்விரோதம் இருந்து வந்ததுள்ளது, இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு  முன்பு சாமுவேல் மரிய செல்வனை திருச்சுழி  காவல் நிலையம் அருகே வைத்து கொடூர மாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் 3 பேர் கடந்த சில  தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரண டைந்த நிலையில் தேடப்பட்டு வந்த நான்காவது குற்றவாளியான வைரமுத்து  என்ற இளைஞன் வியாழனன்று மதுரை  மாவட்ட ஆறாவது நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.