tamilnadu

விழுப்புரம் மற்றும் கடலூர் முக்கிய செய்திகள்

சர்வீஸ் ரோடு கேட்டு பொது நல வழக்கு தொடர வழக்கறிஞர்கள் முடிவு

விழுப்புரம்.ஜன.24- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கடந்த 2017 ல் ரூ.19 கோடி செலவில் புதிய நீதி மன்றம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. நீதிமன்றம் திண்டிவனம் நகரத்திலிருந்து ஒதுக்கு புறமாக உள்ளது. நீதிமன்றத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். அதில் வாகனங்க ளில் வருபவர்கள் அதிகம், ஆனால் வாக னங்களில் வருபவர்கள் தென்பசார் வரை சென்று திரும்பி வரவேண்டியுள்ளதால், திண்டிவனம் அருகே சிங்கனூர் வரை உள்ள சர்வீஸ் ரோட்டை, புதிய நீதிமன்றம் வரை  நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கோரிக்கை எழுந்து வருகிறது,  நீதிமன்றத்திற்கு செல்ல சர்வீஸ் ரோடு  இல்லாததால் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என பலரும், போக்குவரத்து விதிகளை மீறி  எதிர் புறமாக (விழுப்புரம் மார்க்கம்) வாக னங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.சர்வீஸ் ரோட்டை உடனடியாக நீட்டித்து தர வலி யுறுத்தி, வழக்கறிஞர்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.  வழக்கறிஞர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலருக்கு கோரிக்கை வைத்தும்,  சர்வீஸ் ரோடு இதுவரை போடப்படவில்லை. இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி  இரும்பை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற  ஆசிரியர் திருநாவுக்கரசு மற்றும் ஆலங்குப் பத்தைச் சேர்ந்த் காத்தவராயன் ஆகியோர் வழக்கு தொடர்பாக, திண்டிவனம் கோர்ட் டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது,  சிங்கனூர் சர்வீஸ் ரோடு அருகே கார் மோதி யது. இதில், திருநாவுக்கரசு சம்பவ இடத்தி லேயே இறந்தார். உடன் வந்தவர் சென்னை,  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.நீதிமன்றத்திற்கு வந்தவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம், வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதைத்தொடர்ந்து, திண்டிவனம் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு அண்ட் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்  ஏ.கோதண்டம் தலைமையில் பார் அசோசி யேஷன், அட்வகேட்ஸ் அசோசியேஷன் மற்றும் வழக்கறிஞர் நலச்சங்க கூட்டுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு திண்டிவனத் திலிருந்து சர்வீஸ் ரோடு அமைக்கக்கோரி, அமைச்சர் சண்முகத்தை சந்தித்து கோரிக்கை விடுப்பது. தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும்  சம்பந்தபட்ட துறைகள் பேரில் வழக்கறி ஞர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்வது என  முடிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக திண்டிவனம் நீதிமன்றத்திற்கு சென்று வர சர்வீஸ் ரோடு அமைத்து தர வேண்டும் என  கோரிக்கை எழுந்து வருகிறது.

100 இடங்களில் உறுதிமொழி ஏற்புக் கூட்டம்

கடலூர், ஜன. 24- கடலூர் மாவட்டத்தில் மக்கள் ஒன்று மையை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி யன்று 100 இடங்களில் உறுதிமொழி ஏற்புக் கூட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாவட்டச் செய லாளர் டி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பது:- இந்திய அரசியல் சாசனத்தின் முன்னு ரையை பேணிக்காக்கும் வகையில் மக்கள் ஒன்றுமை, மதநல்லிணக்கம் பாதுக்காக்க கடலூர் மாவட்டத்தில் வரும் 26 ஆம் தேதி 100 இடங்களில் உறுதிமொழி ஏற்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.  இதில், குடியுரிமை சட்டத்திருத்தம், மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு போன்ற மக்கள் ஒற்றுமையை பாதிக்கும் நடவ டிக்கையை மத்திய அரசு கைவிட வலியு றுத்தப்படும். அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் நெய்வேலி நகரத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.  உறுதிமொழிக் கூட்டங்களில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி வித்திருக்கிறார்.

ரசாயன பொருளை சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

திருவண்ணாமலை,ஜன.24- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்  பென்னாத்தூர் அடுத்த கார்ணாம் பூண்டியில், ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளி உள்ளது. தலைமையாசிரியராக வெங்கடேசன் என்பவர் உள்ளார். பள்ளியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.  இப்பள்ளியின் அறிவியல் ஆய்வக அறை சுத்தம் செய்யப்பட்டது. அப்போது பள்ளி வளாகத்தில், ஐந்து  கிராம் கொண்ட பொட்டாசி யம் பர்மாங்கனேட் பாக்கெட் ஒன்று கிடந்துள்  ளது. அதை மிட்டாய் என நினைத்து, பள்ளி யில், யு.கே.ஜி., படிக்கும், ஆறு மாணவி யர் உட்பட எட்டு பேர் சாப்பிட்டனர்.  அவர்கள் வாயிலிருந்து உமிழ்நீர்  நீல நிறமாக வந்ததை பார்த்த சக மாண வர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்த னர். உடனடியாக 8 மாணவர்களுக்கும் கீழ்பென்னாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரூ.10 கோடி வாடகை பாக்கி: கடையை ஜப்தி செய்ய அலுவலர்கள் முயற்சி

கடலூர், ஜன. 24- நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை  பாக்கிக்காக கடைகளை ஜப்தி செய்திட நக ராட்சி அலுவலர்கள் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் நகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள பேருந்து நிலையத்தில் 112 கடைகள் ரூ.10 கோடி வரையில் வாடகை செலுத்தா மல் பாக்கி வைத்துள்ளனர். இதனால், நக ராட்சியின் வருமானம் குறைந்ததால் ஊழி யர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை யும், பல்வேறு வளர்ச்சிப்பணிகளும் பாதிக் கப்பட்டுள்ளன. எனவே, வாடகை பாக்கியை வசூலிக்கும் வகையில் பாக்கிதாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும், குறிப்பிட்ட காலக்கெடு விற்குள் பணம் செலுத்தாததால் வியாழக்கிழ மையன்று நகராட்சி மேலாளர் பழனி, நகர்  நல அலுவலர் ப.அரவிந்த்ஜோதி, பொறியா ளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், நகரமைப்பு  அலுவலர் முரளி மற்றும் காவல்துறையினர் பேருந்து நிலையத்திற்குச் சென்றனர். அங்கு வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை ஜப்தி செய்வதாக தெரிவித்தனர். இதனால்,  சில கடைக்காரர்களுக்கும் நகராட்சி அலுவ லர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்  டது. இதனையடுத்து, மீண்டும் 1 வாரம் கால  அவகாசத்தை நகராட்சித் துறையினர் வழங்கி னார்.  மேலும், சிலர் தங்களது வாடகை பணமாக  ரூ.3 லட்சம் வரையில் செலுத்தினர். ஏற்க னவே, காலக்கெடு வழங்கப்பட்ட நிலையில் தற்போது வழங்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பாக்கித் தொகையை வழங்காவிட்டால் கண்டிப்பாக கடைக்கு சீல் வைக்கும் நடவ டிக்கை மேற்கொள்ளப்படுமென நகராட்சி யினர் தெரிவித்தனர்.

மக்கள் தொடர்பு முகாம்

விழுப்புரம்.ஜன.24- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்குட்பட்ட கோணை கிராமத்தில் வரும் 29 ஆம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார். முகாமில், பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக முன்னதாகவே கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் வேலை

விழுப்புரம்.ஜன.24- விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையில் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு வருமாறு:- சமூக பாதுகாப்புத் துறையில் அரசு குழந்தைகள் இல்லத்தில் கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கம் உதவியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம், உயர்நிலை பயின்றிருக்க வேண்டும். இந்த பதவிக்கான தொகுப்பூதியம் மாதம் 9,000 ரூபாய் வழங்கப்படும். தகுதியுள்ள நபர்கள் பிப்பரவரி 4 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள், புகைப்படத்தோடு கூடிய சுய விண்ணப்பத்தை கண்காணிப்பாளர், அரசு குழந்தைகள் இல்லம், சர்வேயர் நகர், சாலாமேடு, விழுப்புரம் என்ற முகவரியில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.மேலும், இது பற்றி தகவல் பெற விரும்புவோர், தொலைபேசி 04146 - 257702 எண்ணில் பணி நாட்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

;