tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

நாளை  கிராம சபை கூட்டங்கள்

காஞ்சிபுரம், அக்.9- காஞ்சிபுரம் மாவட்ட த்தில் காந்தி ஜெயந்தி யன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் நிர்வாக காரணங்களால் சனிக்கிழமையன்று (அக்.11) நடைபெற உள்ள தாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். இக்கூட்டங்களில் கிராம மக்களின் மூன்று அத்தியாவசிய தேவைகள் தேர்வு, சாதிப் பெயர்கள் கொண்ட சாலைகளின் பெயர் மாற்றம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு, டெங்கு தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II, தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படும். வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலக தகவல் பலகையில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

100 நாள் வேலை கேட்டு மனு

திருப்போரூர், அக்.9- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருப்போரூர் ஒன்றிய குழு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை கேட்டு திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் புதனன்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் லிங்கன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், திருப் போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தண்டலம், மடையத்தூர், செம்பாக் கம், கொட்டமேடு கிராமங்  களை சேர்ந்த மாற்றுத்  திறனாளிகள் கலந்து கொண்டனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரி கள், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கையை பரிந்துரை செய்து, உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். நிகழ்வில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் அருள்ராணி, பொருளாளர் பூபதி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இரும்பு திருடிய  4 பேர் கைது

சென்னை, அக்.9- மெட்ரோ ரயில் பணியிடத்தில் இருந்த இரும்பு பொருட்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓஎம்ஆர் சாலை மத்திய கைலாஷ் சந்திப்பு முதல் சிறுசேரி வரை சுமார் 20 கி.மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், துரைப்பாக்கம் பகுதியில் நடைபெறும் மெட்ரோ பணியிடத்திலிருந்து சுமார் 60 கிலோ இரும்பு பொருட்கள் திருடு போனதாக துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இரும்பு பொருட்கள் திருடிய கண்ணகி நகரைச் சேர்ந்த சதீஷ்(22), பிராங்ளின்(20), விக்னேஷ்(22), வெற்றி வேல்(27) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆம்ஸ்ட்ராங்  கொலை குற்றவாளி  உயிரிழப்பு

சென்னை, அக்.9 - பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் முதல் குற்றவாளியாக (ஏ1) குற்றம்சாட்டப்பட்ட நாகேந்திரன் வியாழனன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்தி ரனுக்கு கடுமையான நுரை யீரல் பிரச்சனை ஏற்பட்டது. அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அவரது மனைவியின் நுரையீரல் தானமாக பெறப்பட்டு  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். வியாழனன்று நிலை மோச மடைந்ததால் வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில், நோய்த்தொற்று அதிகரித்த தால் உயிரிழந்தார். இந்த வழக்கில் 3வது முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனும் புழல் சிறையில் அடைக்கப்  பட்டுள்ளார். தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விண்ணப்பித்த அஸ்வத்தாமனுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம்  பிணை வழங்கியுள்ளது.

குத்தம்பாக்கம் ஊராட்சியில்  ரூ.18 லட்சத்தில் புதிய அங்கன்வாடி

திருவள்ளூர், அக்.9-  பூந்தமல்லி ஒன்றியம், குத்தம்பாக்கம் ஊராட்சி, இருளப்பாளையம் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா புதனன்று நடந்தது. ஒன்றிய செயலாளர் டி.தேசிங்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, மகேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்வில் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜசேகர், திமுக ஒன்றிய நிர்வாகிகள் கந்தபாபு, சுமதி விஜயகுமார், சாக்ரட்டீஸ், கூடப்பாக்கம் கந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.