tamilnadu

img

சென்னையில் காய்கறி விலை 3 மடங்கு வரை உயர்வு

சென்னை, ஜூன் 20- சென்னையில் ஊரடங்கு காரணமாக காய்கறிகளின் விலை இரண்டு, மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பரவலை குறைக்கும் வகையில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே சுற்றித் திரிவதை தடுக்கவும், காய்கறிகள் தடையின்றி கிடைக்கவும் நடமாடும் காய்கறி கடை களுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சாலைகளிலும், குடியிருப்புப் பகுதி களிலும் காய்கறிகள் கிடைக்கும் வகையில்  நடமாடும் வண்டிகளோடு வியாபாரிகள்  வியாபாரம் செய்கின்றனர். இந்நிலை யில் திருமழிசைக்கு சென்று காய்கறி வாங்கி வர 2 ஆயிரம் ரூபாய் வரை செலவு  பிடிக்கிறது. மாநகராட்சி அனுமதி கொடுத்த  போதிலும், காவல்துறையினரின் கெடுபிடி களால் சிறு வியாபாரிகள் திருமழிசைக்கு  செல்ல முடியவில்லை. இதனால் மொத்த  வியாபாரிகளும், சில்லரை வியாபாரி களும் பாதிக்கப்படுவதோடு, நுகர்வோரும்  பாதிக்கப்படுகின்றனர். காய்கறி கிடைக்காத தால் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு, அவ ரைக்காய் 70 ரூபாய்க்கும், பீன்ஸ் 100  ரூபாய்க்கும் விற்பனையானது. காவல்துறை யினரின் கெடுபிடி தொடருமானால் காய்கறி களின் விலை மேலும் மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.