tamilnadu

img

வீடூர் அணை திறப்பு 

வீடூர் அணை திறப்பு 

விழுப்புரம், அக்.22- விழுப்புரம் மாவட்டம் விடூரில் உள்ள வீடூர் அணையில் புதன்கிழமை உபரி நீர் திறக்கப்பட்டது.  கரையோர மக்க ளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக சங்கராபரணி ஆறு உற்பத்தியாகும் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட வீடூர் அணையின் 32 அடி கொள்ளளவை எட்டியதை அடுத்து புதன்கிழமை மதியம் 12 மணி அளவில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தொழிலாளர் நலன் இயக்குநருமான எஸ்.ஏ.ராமன், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இதனைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ், உதவி செயற்பொறியாளர் அய்யப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.வடகிழக்கு பருவமழை நீடிப்பதால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.