tamilnadu

img

சிபிஎம் அலுவலகத்தில் விசிக, மதிமுக தலைவர்கள்...

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் மக்களவை தொகுதிகளில் வெற்றிபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் தொல். திருமாவளவன், து. ரவிக்குமார், திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோர் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களைக் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் ஆகியோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.