tamilnadu

img

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. 
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-இல் நடைபெற உள்ளது. பிப். 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 1 கோடியே 37 லட்சத்து 6 ஆயிரத்து 793 ஆண் வாக்காளர்கள், 1 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 637 பெண் வாக்காளா்கள், 4,324 திருநங்கைகள் என மொத்தம் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். சென்னை மாநகராட்சியில் மட்டும் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளா்கள் உள்ளனர்.
இந்நிலையில், தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளன. பிப்ரவரி 4ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவுள்ளன. வேட்புமனு பரிசீலனை பிப். 5-ஆம் தேதி நடைபெறும். பிப். 7-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;