tamilnadu

img

புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்தபடி பண்டிகை கால உதவி தொகை வழங்காததை கண்டித்து சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ. 2000 பண்டிகை கால உதவி தொகைக்கு நிதி ஒதுக்கியும், இன்னும் வழங்காததை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.சிஐடியு மாநிலத் தலைவர் பிரபுராஜ், நிர்வாகிகள் ரவிச்சந்திரன்,மதிவாணன், லிங்கேசன்வேலு, உட்பட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.