tamilnadu

img

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு....: முதல்வர் - தலைவர்கள் இரங்கல்

சென்னை:
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.தில்லி தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட மத்திய உணவுத்துறை அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவன தலைவரு மான ராம்விலாஸ் பஸ்வான் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

ராம்விலாஸ் பஸ்வான் சமூக நீதிக்காகவும் ஏழ்மை நிலை மக்களின் முன்னேற் றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட்டவர்.பிறப்பு சம்பவமாக இருக்கலாம், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற் கேற்றவாறு வாழ்ந்தவர் பஸ்வான்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.